நம் வாழ்வில் நாம் அனைவருமே மூன்று தளங்களில் பயணம் செய்கின்றோம்.
1. வீடு
2. பள்ளி
3. சமூகம்
- வீட்டில் அம்மா அப்பா, உடன்பிறந்தவர்கள் , உறவினர்கள் மூலம் நாம் நெறிபடுத்தப்படுகின்றோம்.
- பள்ளியில் ஆசிரியர்கள் மூலம் முறைபடுத்தப்படுகின்றோம்.
- சமூகத்தில் நண்பர்கள் , சமூக சூழல்கள் மூலம் மேம்படுத்தப்படுகின்றோம்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர் கெல்லாம் இனிது.
மக்கட்பேறு அதிகாரத்தில் 68 வது குறள் கூறுவது போல் எல்லா பெற்றோருக்கும் தம் மக்கள் தம்மை விட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்கள் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தான் என் பெற்றோர்கள்.
"அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு ” என்பார்கள். ஆனால் எனக்கு சற்று நேர்மாறாக இருந்தனர். அன்பு,கருணை,பாசம் என்பதெல்லாம் அப்பா மூலம்தான் கற்றுக் கொண்டேன். ஆனால் கண்டிப்பானவர். என் தம்பி செய்யும் தவறுக்கு கூட ”முன் ஏர் சரியாக போனால் தானே , பின் ஏர் சரியாக வரும் ” என என்னைத் தான் கண்டிப்பார். மூத்தவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.
எங்கள் அப்பாவிற்கு எண்ணெய் வியாபாரம் தான் தொழில். பள்ளி நாட்களில் தினசரி நான் மதிய உணவிற்கு பின் , அப்பாவை மதிய உணவிற்கு அனுப்பிய பிறகு தான் பள்ளிக்கு செல்வேன். அதனால் கைச்செலவிற்கு அப்பாவுக்கு தெரியாமல் 5 ரூபாய் எடுத்துக்கொள்வேன்.1980 களில் இது பெரிய தொகை. நண்பர்களுக்கு தீனி வாங்கிக்கொடுத்து , நானும் தின்று தீர்ப்பேன். இது எங்கள் வீட்டில் குடியிருந்த என் வகுப்பறை தோழர்கள் நாராயணன் (தற்போது ரமணி மீயூசிகல்ஸ் உரிமையாளர்) மற்றும் பாலமுருகன் (எஸ்பி டிராவல்ஸ் உரிமையாளர்) ஆகியோர் மூலம் என் அப்பாவிற்கு தெரிந்து விட்டது.
அவ்வளவு தான் அன்று இரவு சாட்டையோடு வந்தார், விளாசி தள்ளினார்.
நம் வீட்டுப் பணம் என்றாலும் கேட்காமல் எடுக்கக்கூடாது என்பது புரிந்தது.
மிகச்சிறந்த இசை ரசிகர் . காலை நேரத்தில் வானொலியை இசைக்க விட்டு உடன் இவரும் பாடிக் கொண்டிருப்பார். இவரால்தான் இசையின் மீது எனக்கு காதல் பிறந்தது. இன்றளவும் பாடிக்கொண்டிருக்கின்றேன். மாவட்ட அளவில் பாடல் பாடும் ஆசிரியர்கள் தேர்வில் கலந்து கொண்ட 90 பேர்ல் 7 வதாக வந்தது இவரால் தான்.
மிகுந்த கோவக்காரர். ஆனால் யாரிடமும் சண்டை போட்டுப் பார்த்ததில்லை. அதனால் தான் , இன்று வரை நான் யாரிடமும் கோபமாக பேசியதில்லை.
1980 களில் மண்ணெண்ணை என்பது மிகவும் முக்கியமான எரிபொருள். எனவே பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் அப்பாவை நன்றாக தெரியும். இது பள்ளியில் நான் அடக்கமான , நல்ல மாணவனாக வளர வேண்டிய கட்டாய சூழலை எனக்கு உருவாக்கிவிட்டது. எனக்கு வந்த ஆசிரியர்களில் முசபர்கான் ஆசிரியர் , ஷெரீப் ஆசிரியர் ஆகியோர் எனது அப்பாவிற்கே ஆசிரியர்கள். பழனி ஆசிரியர் எங்கள் வீட்டில் குடியிருந்தவர். தர்மலிங்கம் ஆசிரியர் எனது அப்பாவின் வகுப்பறை தோழர். உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் உறவினர். இப்படி பலரும் இருந்தது , என்னை நல்ல மாணவனாக இருக்க வைத்தது.
பத்தாம் வகுப்பிற்கு பின் இனியும் வீட்டிலிருந்தே படித்தால் நமது கலைத்திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதால் வெளியில் சென்று தான் படிப்பேன் எனச் சொல்லிவிட்டேன். அப்போது ஊத்தங்கரையில் இருந்து நிறைய மாணவ , மாணவிகள் மேல்நிலைப் படிப்பிற்காக வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள , ஜவ்வாது மலை மீது அமைந்த அத்திப்பட்டு என்ற ஊரில் உள்ள , புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்திருந்தனர். எனது பள்ளி தோழன் செந்தமிழ்செல்வன் (மென்பொருள் பொறியாளர், பெங்களூர்) மூலம் இந்த பள்ளியை பற்றி தெரிந்து கொண்டு அப்பாவிடம் சொல்லிச் சேர்ந்தேன். அந்த இரண்டு ஆண்டுகளும் எனக்கு வசந்த காலம். பேச்சு , நடிப்பு , பாடல் என பல்துறையிலும் , எனக்குள்ள ஆர்வத்திற்கு நல்ல தீனி கிடைத்தது. ஒரு முறை நாடக காட்சியில் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக , பயிற்சியாளரிடம் உண்மையாகவே கன்னத்தில் அடி வாங்கி நடித்தது மறக்க முடியாதது.
பனிரெண்டாம் வகுப்பிற்கு பின் , எனது கனவான சினிமாதுறை சார்ந்து படிப்பதாக சொன்னபோது ஏனோ அதை அப்பா ஏற்கவில்லை. இன்றளவும் அவர் மீது எனக்கு உள்ள மன வருத்தம் அது மட்டும் தான். அன்று மிகவும் பிரபலமான படிப்பான ஆசிரியர் பயிற்சிக்குத்தான் அனுப்புவேன் என்று கூறிவிட்டார். 731 மதிப்பெண் எடுத்த என்னை , ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்க்க 2 மாதங்கள் அலைந்து , திரிந்து திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்த்து விட்டார். இந்த இரண்டு ஆண்டுகளும் எனக்கு இன்னுமொரு வசந்த காலம். பேச்சு , நடிப்பு , பாடல் இவற்றோடு, சமூக பிரச்சனைகளை பற்றிய அறிவு கிட்டியது. திராவிடர் கழக பொதுச்செயலாளர் மானமிகு. கி.வீரமணி அவர்களோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் பயிற்சி முடித்து நான் வரும் போது கிளைக்கோமா(www.glaucoma.org) என்ற கண் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கண்பார்வையை அப்பா இழந்திருந்தார். மேற்கொண்டு படிக்க செல்லாமல் , அப்போது அப்பா நடத்தி வந்த கோழிக்கடையை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளானேன்.
அப்போது முதல் தம்பி நந்தகுமார் கல்லூரி மூன்றாம் ஆண்டும் , இரண்டாவது தம்பி பூபதி 8 - ம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். குடும்ப சூழலால் 18 வயதிலேயே தொழில் செய்ய தொடங்கினேன்.
கோழிக்கடை நடத்தினாலும் படித்த படிப்பு மறந்து விடக்கூடாது என்பதால் , இன்றும் நடந்து கொண்டிருக்கும் SUCCESS TUTORIAL COLLEGE அண்ணன் மூர்த்தி அவர்களிடம் பணிபுரிந்தேன். அந்த அனுபவத்தில் கோடைவிடுமுறையில் 1994-ல் ENGLISH GRAMMAR CLASS நடத்தினேன். அங்கு மாணவர்கள் மூலம் , எனது திறமையை கேட்டறிந்த எனது அப்பாவின் நண்பரும் , எனது குருநாதருமான ஆசிரியர் தர்மலிங்கம் அவர்கள், அவரது தனிவகுப்பினை (TUTION CENTRE) கவனிக்கும் பொறுப்பினை கொடுத்தார். இங்குதான் அருள் (கலைமகள் கம்பியூட்டர்) அறிமுகமானார். இங்கு இரண்டு ஆண்டுகள் இருந்த போது படித்த பல மாணவர்கள் இன்று சிறந்த இடங்களில் உள்ளனர். இதே நேரத்தில் என்.வெள்ளாளப்பட்டி பள்ளியில் நானும் நண்பர் அருளும் ஆசிரியராக ரூ.500 - க்கு பணி செய்தோம்.
எப்படியாவது சினிமாத்துறைக்கு சென்று விட வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த போது , 1995 -ல் TNPSC மூலம் இடைநிலை ஆசிரியர் தேர்வு நடந்தது. வேலை கிடைத்துவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்பதால் தேர்வை சரியாக எழுதாமல் விட்டேன். ஆனால் 1996 -ல் முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைத்தது. அப்பா , அம்மா , எங்கள் வீடுகளில் குடியிருந்த அக்ரி சார் , ஆசிரியர் முருகேசன் ஆகியோரின் வற்புறுத்தலால் பணியில் சேர்ந்தேன். இதோ 18 பணி ஆண்டுகளை கடந்து விட்டேன். இன்றும் என் அப்பா என்னோடு இருந்து கொண்டு , இன்னும் என்னை சிறு குழந்தையென நினைத்து அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்.
எனது தம்பிகள் இருவரும் திருமணமாகி , தனித்தனியாக குடி அமர்ந்து விட்ட போதும், எங்கள் உறவுச்சங்கிலியை துண்டாகி விடாமல் பாதுகாத்து வருபவர் எங்கள் அப்பா தான். சில நேரங்களில் இவர் என்னோடு ஊத்தங்கரையில் இருப்பார். எனது அம்மா சென்னையில் என் தம்பியோடு இருப்பார். அப்போது , எனது அம்மாவிடம் இவர் பேசிவிட்டு , நான் கேட்காத போதும் ” இரும்மா பெரியவன் உன்கிட்ட பேசனும்மாம்னு ” போனை எங்கிட்ட கொடுப்பார். நான் பேசி முடித்து வைத்த பிறகு ” சும்மா நல்லா இருக்கீங்களா ? நீ கேட்டா போதும் அவங்களுக்கு சந்தோசம்னு” சொல்லுவார். இப்படி எங்களுக்குள் உறவு நூல் அறுந்துவிடாமல் இருக்கிப்பிடிக்கும் இவரிடம் நான் கற்றுக் கொள்ள இன்னுமும் இருக்கின்றது. நன்றி அப்பா.......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக